
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும் தேசிய நூல் அறக்கட்டளையும் (National Book Trust of India) இணைந்து நடத்தும் ‘புத்தகத் திருவிழா’, திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்நூல் கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 17 அன்று, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு, அவர்தம் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி நிகழ்ச்சி அமைப்பாளர்களால் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த செய்திக் குறிப்பு
