“சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் 12.03.2023 அன்று ‘வரலாறு ஒரு கதை போல…’ என்ற தலைப்பில் பதிவான அவருடைய கட்டுரை, இப்படித்தான் தொடங்குகிறது.
திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் உள்ள அழுந்தூர் என்ற சிற்றூரில் சிதைந்திருந்த பழங்காலக் கோயிலையும், அங்குப் புதைந்திருந்த சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் சமீபத்தில் ஆய்வு செய்தனர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர். அந்த ஆய்வுக் களம் கூட்டிச்சென்ற பாதைகளும், பாதைகள் காட்டிய சான்றுகளும், சான்றுகளால் கிட்டிய அழுந்தூரின் வரலாறும் பற்றியதுதான் ‘வரலாறு ஒரு கதை போல…’.
அழுந்தூர் கண்டுபிடிப்புகள் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
