‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

திரும்பிப்பார்க்கிறோம்

கண் மருத்துவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனருமான இரா. கலைக்கோவன் வரலாற்றாய்வைத் தொடங்கிய நாள் முதல் தொடரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப்பார்க்கிறோம் எனும் புதிய பகுதியை வரலாறு ஆய்விதழில் 2007இல் தொடங்கினார். 

ஆய்வு மையத்தின் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள், மையம் சார் ஆய்வாளர்களின் பணிகள், வரலாறு ஆய்விதழின் தோற்றமும் வளர்ச்சிப்பாதையில் அது சந்தித்த சூழல்களும் என ஓர் ஆய்வுக்குழுவின் நெடிய பயணச்சுவடுகள் இத்தொடரில் காலநிரலாகப் பதிவாகியுள்ளன. முதல் பத்துத் தொகுதிகள் தனியாகவும் வெளியிடப்பெற்றன. இதுநாள்வரை 13 தொகுதிகள் வரலாறு இதழுடன் இணைந்து பதிவாகியுள்ளன.

  • தொகுதி 1 1981-1983       பக்கங்கள் 108        
  • தொகுதி 2 1983-1988       பக்கங்கள் 115        
  • தொகுதி 3 1988-1989       பக்கங்கள் 112        
  • தொகுதி 4 1989-1991       பக்கங்கள் 112        
  • தொகுதி 5 1991-1993       பக்கங்கள் 124        
  • தொகுதி 6  1993-1995       பக்கங்கள் 164        
  • தொகுதி 7 1995-1999       பக்கங்கள் 164        
  • தொகுதி 8 1999-2004       பக்கங்கள் 168        
  • தொகுதி 9 2004-2007       பக்கங்கள் 168        
  • தொகுதி 10   2007-2009     பக்கங்கள் 166      
  • தொகுதி 11  2009-2011     பக்கங்கள் 198      
  • தொகுதி 12  2011-2011     பக்கங்கள் 192      
  • தொகுதி 13 2011-2013      பக்கங்கள் 158