டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள்- பட்டியல் II

நூலாசிரியர்கள்-

அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

28. பாச்சில் கோயில்கள், 2017, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 300.

– பாச்சில் கோயில்களான அவனீசுவரம், திருமேற்றளி, ஆதிநாயகப்பெருமாள், ஆகிய மூன்றுடன் சோழமாதேவி கயிலாசநாதர், கூத்தப்பார் மருதீசர், பெருங்குடி பெருமுடியீசுவரர், குமாரவயலூர் கற்றளிப் பரமேசுவரர், திருப்பாராய்த்துறைத் தாருகாவனேசுவரர், நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் – சுந்தரேசுவரர் கோயில்களைக் குறித்த 10 விரிவான ஆய்வுக்கட்டுரைகள்.

29. எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள், 2016, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 200, விலை ரூ. 250.

திருஎறும்பியூர் எறும்பீசுவரம், துடையூர் விஷமங்களேசுவரம் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பங்கள், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் உரிய ஒளிப்படங்களுடன் பதிவாகியுள்ளன.

30.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, 2018, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 250. திருச்செந்துறை சந்திரசேகரர், திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர், உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள் – கயிலாசநாதர் கோயில்களின் கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுத் தரவுகளின் அடங்கல்.

31. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு, 2018, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 300.

– உறையூர்த் தான்தோன்றீசுவரம், சீனிவாசநல்லூர்க் குரக்குத்துறை, சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், அழுந்தூர் வரகுணீசுவரம், அலகறை சேமீசுவரம், சிலையாத்தி வாசுதேவப்பெருமாள் ஆகிய ஏழு கோயில்களின் கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுநூல்.

32. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், 2021, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 300.

– தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயிலிலுள்ள புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலின் கட்டமைப்பு, சிற்பச்செழுமை, கல்வெட்டுச் சிறப்பு, தனித்தன்மைகள் குறித்த விரிவான ஆய்வுநூல், 65 பக்கப் படங்களுடன்.

நூலாசிரியர் மு. நளினி

    33. பாதைகளைத் தேடிய பயணங்கள், 2009, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 150.

    – 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. முதற் கட்டுரையான வரலாற்றுப் பதிவுகள் களஆய்வுகளின்போது ஆசிரியரின் கண்களில் விழுந்து வரலாற்று மேடைக்கு வந்த புதிய பதிவுகள். புணை ஆவணம், காவற்காட்டு இழுவை, கல்வெட்டில் மருத்துவர், இராமாயணக் கதவுகள், தொட்டான் பட்டான், மரணதண்டனை, மகப்பேற்றின் கொண்டாட்டம், கழுதையேற்றம், மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள், மீனாட்சி கோயில் மேற்றள மணிக்கூண்டு, திருமுன் நிற்கும் திருமலை, மரபுவரிசையில் நாயக்க அரசர்களின் சிற்பங்கள், எப்பாடுபட்டாகிலும் மகப்பேறு, பார்க்கவும் படிக்கவும் இராமாயணப் பத்திகள், சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும், ஆரத்தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன், கழுக்குன்றப் புதையல்கள்ஆகியன பதிவுகளின் தலைப்புகள்.

    தமிழ்நாட்டுக் குடைவரைகள் – சிலசெய்திகள், பரமேசுவர மகா வராக விஷ்ணு கிருகம், தமிழ்நாட்டு ஆடற்கலை, நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழர் கால ஆடலாசான்கள், இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள், மூவேந்தன் என்றும் பசாசின் பேர், ஏகவீரி, திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் கோயில், கோவண நாடகம், உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில், திருக்கோயில் ஆடலரங்குகள், வைஷ்ணவ மாகேசுவரம், விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில், ஓங்கார நாதத்து வேதமங்கலம், திருவரங்கத்து வைகாசித் திருவிழா, அங்கயற்கண்ணி வளாகம், வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள், மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயில், பூலோகநாதசுவாமி கோயில், எரணியம்மன் கோயில் ஆகிய தலைப்புகளில் பிற கட்டுரைகள்.

நூலாசிரியர்கள் அர. அகிலா, இரா. கலைக்கோவன்

    34. ஒருகல் தளிகள் ஒன்பது, 2009, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 280, விலை ரூ. 200.

    – மாமல்லபுரத்துப் பல்லவர் கால ஒருகல் தளிகள் ஒன்பதையும் நிறைவாக ஆய்வு செய்து விரிவான அளவில் உருவான கட்டுரைகளை உள்ளடக்கிய முதல் நூல். ஒன்பது தளிகளையும் பல கோணங்களில் ஒப்பீடு செய்து பொதுக்கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியர்கள் கோ. வேணி தேவி, இரா. கலைக்கோவன்

    35. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள், 2011, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 384, விலை ரூ. 300.

    – சோழப் பெருவேந்தர் கோச்செங்கணான் அமைத்த 32 மாடக்கோயில்களை ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூல். கோச்செங்கணான் குறித்த ஆய்வுக்கட்டுரையும் மாடக்கோயில்கள் குறித்த விரிவான ஒப்பீடும் குறிப்பிடத்தக்கன. பசுபதிகோயில், நல்லூர், ஆவூர், ஆறைவடதளி, சேய்ஞலூர், தலைஞாயிறு, நாலூர், நறையூர், குடவாயில், நன்னிலம், அம்பர், வைகல், மலையீசுவரம், சட்டநாதர் கோயில், கீழ்வேளூர், சிக்கல், வலிவலம், தேவூர், தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்-தட்சிணபுரீசுவரர், ஆக்கூர், திருவிளையாட்டம், பண்டார வாடை, பெருவேளூர், நாங்கூர், நகரி, இந்தளூர், கீழையூர், திருப்பேர்நகர், ஆலம்பாக்கம், எலவானசூர்க் கோட்டை, பெருங்கடம்பனூர் ஆகிய ஊர்க்கோயில்கள் நன்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பதிப்பாசிரியர்கள் மா. ரா. அரசு, மு. நளினி, அர. அகிலா

    36. கலை 66, 2014, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 642, விலை ரூ. 500.

    – டாக்டர் இரா. கலைக்கோவனின் ஆய்வு மாணவர்களும் நண்பர்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் பணிப் பாராட்டு நூல். உறவுகள், நண்பர்கள், மாணவர்கள் என 66 பேர் டாக்டர் கலைக்கோவனிடம் கற்றதும் பெற்றதும் பகிர்ந்துள்ளனர்.

இந்நூல்களில் இப்போது கிடைப்பவை

1.  பாச்சில் கோயில்கள்

2. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்

3.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

4. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு

5. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

6. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

7. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)

நூல்கள் பெற– +91 93451 11790