சோழர் காலப் பிடாரி ஏகவீரி

ஏகவீரி, வலஞ்சுழி வாணர் நூலிலிருந்து

குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல் ‘வலஞ்சுழி வாணர்’ (முதல் பதிப்பு திசம்பர் 2005). டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் திருவலஞ்சுழியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்படுத்தப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது.

திருவலஞ்சுழி வளாகத்தில்-

பெரியநாயகி என்றழைக்கப்படும் வண்டுவாழ்குழலி அம்மையின் திருக்கோயில் கிழக்குப் பார்வையாகக் கோபுரம் பெற்று அமைந்துள்ளது. இதன் முன் நந்திமண்டபமொன்றும் பத்திப் பிரிப்புப் பெற்ற பலித்தளம் ஒன்றும் உள்ளன. பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள இருநிலைக் கோபுரத்தின் இருபுறத்தும் வளரும் மதிலால் சூழப்பட்டுள்ள சுற்றுவெளியின் தென்கிழக்கு மூலையில் தனித் திருமுன் பெற்று அமர்ந்துள்ளார் அஷ்டபுஜ மகா காளி என்றழைக்கப்படும் சோழர் காலப் பிடாரி ஏகவீரி. இளநகை ஏந்தலாய் அமர்ந்திருக்கும் இவ்வம்மையின் எழில் சொற்களை மீறிய சுந்தரம்.

உடல்‌ முழுவதும்‌ புடவையொன்றால்‌ மறைக்கப்பட்ட நிலையில்‌ ஒளிவிளக்குகள்‌ ஏதுமற்ற இருட்டுச்‌ சூழலில்‌ அடையாளம்‌ காணப்படாத புதையலாய்‌ அஷ்டபுஜ மகாகாளி என்ற புதுப்‌பெயருடன்‌ இருந்த இவ்வம்மையை, சேத்ரபாலர்‌ கோயில்‌ கல்வெட்டுகள்‌ குறிப்பிடும்‌ பிடாரி ஏகவீரி என அடையாளப்‌படுத்த முடிந்தமை இந்நூலாசிரியர்களின்‌ பெரும்‌ பேறு.

(வலஞ்சுழி வாணர், பக்கங்கள் 11 மற்றும் 25, திசம்பர் 2005)

– முனைவர் மு. நளினி, முனைவர் இரா. கலைக்கோவன்

‘தி இந்து’ மின்னிதழில், 22.07.2026 அன்று ‘Pidari Ekaveeri: a fierce Goddess, a captivating smile, and Raja Raja’s mother-in-law’s grant’ என்ற தலைப்பில் திருவலஞ்சுழியின் பிடாரி ஏகவீரி குறித்த காணொலி வெளியானது. டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய தகவல்களுடன் காணொலியைக் கீழ்காணும் இணைப்பில் காணலாம்-

நன்றி: THE HINDU

https://www.youtube.com/watch?v=kFGdoI3_3po

வலஞ்சுழி வாணர்

வலஞ்சுழி வாணர்

குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான நூல்.